முருகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மலேசியாவில் உள்ள முருகன் சிலை

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • முருகு, பெயர்ச்சொல்.
  1. இளமை
    முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)
  2. கடவுள் தன்மை
    முருகு மெய்ப் பட்ட புலைத்திபோல (புறநா. 259)
  3. மணம்.
    முருகமர்பூ முரண்கிடக்கை (பட்டினப். 37)
  4. அழகு
  5. வெறியாட்டு.
    முருகயர்ந்துவந்த முதுவாய் வேலன் (குறுந். 362).
  6. வேள்வி.
    படையோர்க்கு முரு கயர (மதுரைக். 38)
  7. திருவிழா. (திவா.)
    முருகயர்பாணியும் (சூளா. நாட். 7)
  8. பூத்தட்டு. (நாமதீப. 429.)
  9. தேன்.
    முருகு வாய்மடுத்துண்டளி மூசும் (நைடத. மணம்புரி. 23)
  10. கள்
  11. எலுமிச்சை
  12. எழுச்சி. (திவா.)
  13. அகில்
  14. திருமுருகாற்றுப்படை.
    முருகு பொருநாறு (பத்துப் பாட்டு, தனிப்பா.)
  15. விறகு. (திவா.)
  16. காதணிவகை.
    வச்ர முருகை யெந்தக் கோனான் றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - muruku
  1. Tenderness, tender age; youth
  2. divinity
  3. Fragrance
  4. Beauty
  5. Dancing while under possession by Skanda
  6. Sacrificial feast
  7. Festival
  8. Flower-salver
  9. Honey
  10. Toddy
  11. Sour lime
  12. Elevation, height
  13. Eagle-wood
  14. A poem in Pattu-p-pāṭṭu
  15. Fuel
  16. An ornament worn in the helix of the ear
விளக்கம்
  • இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
  • மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. (ம்+உ, ர்+உ, க்+உ --- மு ரு கு)
  • இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முருகு&oldid=1988652" இலிருந்து மீள்விக்கப்பட்டது