நற்கருணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நற்கருணை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • கிறித்தவ மக்கள் ஒன்றுகூடி இறைவேண்டல் செய்து, கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் இறைவல்லமையால் இயேசு கிறித்துவின் உடலும் இரத்தமுமாக மாறிட, அவற்றை உட்கொள்ளும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
  • நற்கருணை என்பது நன்மை (நல்ல)+கருணை எனப்பிரியும். ஆங்கிலத்தில் eucharist. அச்சொல்லின் வேர் கிரேக்க மொழியில் உள்ளது. கிரேக்கத்தில் εὐ (eu) என்றால் நல்ல என்பது பொருள். χάρις (charis, காரிசு) என்றால் அருள் என்பது பொருள். இதுவே தமிழில் நற்கருணை என்று பெயர்க்கப்பட்டது. மேலும், εὐχαριστία (eukharistia)என்னும் கூட்டுச்சொல் நன்றியறிதல், நன்றி மன்றாட்டு எனவும் பொருள்படும்.
பயன்பாடு
  • பின்பு இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதை பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார் ((லூக்கா 22:19) திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நற்கருணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்கருணை&oldid=1065705" இலிருந்து மீள்விக்கப்பட்டது