ஆர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆர் (இ)

  1. ஆர் என்னும் பெயர்ச்சொல் ஆத்தி மரத்தைக் குறிக்கும்
  2. ஆர் என்னும் வினைச்சொல் நிறைதலைக் குறிக்கும்
  3. ஆர் என்னும் இடைச்சொல் இயற்பெயரோடு வரும் (தொல்காப்பியம் இடையியல் 22)
  4. ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலைக் கிளவியாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 23)
  5. ஆர் என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த்தும்
விளக்கம்
பயன்பாடு
  1. போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்காப்பியம் 3-63)
  2. வயிறார உண்டார்
  3. தொல்காப்பியனார் வந்தார், அரசனார் வந்தார், பார்ப்பார் வந்தார், (யானையார் வந்தார்)
  4. செல்லல் மன்னார் நெடுந்தகை (இளம்பூரணர் எடுத்துக்காட்டு) (மன் + ஆர்)
  5. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதல் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை (முதுமொழிக்காஞ்சி 1)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்&oldid=1969145" இலிருந்து மீள்விக்கப்பட்டது