ஓசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--ஆங்கிலம்--

பொருள்[தொகு]

  • ஓசி, பெயர்ச்சொல்.
  1. இலவசம்
  2. இரவல்
  3. ஆசானின் (அ) ஓசனின் மனைவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. free of cost
  2. loan
  3. wife of one's teacher

விளக்கம்[தொகு]

  • இலவசம் என்ற பொருளில் ஓசி என்ற சொல் பயன்படுவதற்கான விளக்கம்:- ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியினர், இந்தியாவில் தபால்/அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியபோது, மக்களிடமிருந்து தபால் பொருட்களுக்காகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது...ஆனால் கம்பனியினரின் கடிதங்களுக்கு கட்டணம் கட்டாமல் 'On Company Service' என்று முத்திரை இட்டுவிடுவர்...அதாவது கம்பனியினருக்கான இலவசமான தபால் சேவை என்று அர்த்தம்...பின்னர் அந்த ஆங்கில சொற்றொடரின் முதல் இரு சொற்களின் முதல் எழுத்துக்கள் ஓசி---(OC) எனும் தனிச் சொல்லாகி இலவசம் என்பதனைக் குறிக்கும்படி மக்களிடையே பிரபலமடைந்தது...இந்தப்பொருளில் இன்றும் பயன்பட்டுவரும் ஒரு சொல்...கம்பனியரின் காலத்தில் அவர்களுக்கென்று, தற்போது இந்திய அரசுக்கு உள்ளதுபோல, தனியான தபால் வில்லைகள் இருந்ததில்லை...

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓசி&oldid=1886452" இலிருந்து மீள்விக்கப்பட்டது