குரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்[தொகு]

பொருள்
நிறம், செந்நிறம்
இலக்கணம்
"குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-5
இலக்கியம்
குருத்துளி பொழிந்தது (இளம்பூரணர் உரை மேற்கோள்)
"குருமயிர்ப் புருவை" (ஐங்குறுநூறு 238) = செம்மறியாடு
"குரங்கின் தலைவன் குருமயிர்க் கடுவன்" (ஐங்குறுநூறு 275) = சம்முகக் குரங்கு
"மேற்பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் னுன் குருக்கண், நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக் குலைப்பதன் தோற்றம் காண்" (கலித்தொகை 101-15)
குருதி = உடலுக்குள் ஓடும் செம்புனல் (ஒப்புநோக்குக ஆ < ஆதி - ஆதிமந்தி, மரு < மருதி - ஆட்டனத்தியைக் காப்பாறியவள்
விளக்கம்
குரு என்னும் சொல் நிறச்செம்மையைக் குறிக்கும் சொல்லாட்சிகளை எண்ணும்போது நிறச்செம்மை உளச்செம்மையை உணர்த்தும் ஆகுபெயராக மாறிச் செம்மையானவராக விளங்கும் ஆசிரியரை உணர்த்தும் குரு என்னும் செந்தமிழ்ச் சொல்லாக அமைந்துள்ளது. இது வடசொல் அன்று.
ஒப்புநோக்குக
கெழு

பெயர்ச்சொல்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) குரு

  1. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் ()
  2. ஆசான், குரவர்
  3. கொப்புளம், வேர்க்குரு
  4. (மத, சமய) ஆசாரியர், தலைவர்
  5. (கிறித்தவ வழக்கில்) இறைபணிக்கென்று திருநிலை பெற்றவர்
  6. (இயேசு கிறித்து) பெரிய குரு
  7. (வான்குறியியல், வானியல்) வியாழன் என்னும் கோள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்

குரு என்னும் சொல் தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களைத் தரும் வேரிலிருந்து தோன்றுவது.

பயன்பாடு
  • மாதா, பிதா, குரு தெய்வம்.
  • இன்றைய ஆய்வாளர் பலருக்கு இவர்தான் குரு.
  • பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் மடத்துக்குச் சென்றபின்பு ஆற்றிலே தாங்கள் பட்ட அவதியைச் சொல்லித் திரிந்தார்கள் (பரமார்த்த குருவின் கதை)
  • இப்போது கிறித்து தலைமைக் குருவாக வந்துள்ளார் (எபிரேயர் 9:11)திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :முன்னோடி - ஆசிரியர் - உயர்வு - ஆசான் - நிலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரு&oldid=1634071" இலிருந்து மீள்விக்கப்பட்டது