உதவி பேச்சு:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எப்படி நாம் பல பொருள்களைச் சேக்கிறோமோ (பட்டியல் வடிவில்) அப்படியே சொல் வளப்பகுதியும், ஆதாரப் பகுதியும் அமைதல் நன்று. புதுப் பயனர்களுக்கு சிக்கலான வார்ப்புரு வடிவ பயன்பாடு குழப்பத்தை ஏற்படுத்தும். 7 வது சொல்லுக்கு என்ன செய்வது??? --Natkeeran 03:31, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஒரு சொல்லின் வலப்பக்கம் வெறுமே வெள்ளை நிறத்தில் இருப்பதால், பயன் இருப்பதாகத் தெரியவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக, வலப்பக்கம் உள்ள scroll ஆழியினை பயன்படுத்தாமல் ஒருவர், ஒரு பக்கத்தினைப் படித்தால் நன்றா இருக்குமென்று எண்ணுகிறேன்.அடைப்புக்குறியீடுகளுக்கு பதில், கட்டம் இடும் வசதி மூலம் செய்வோமா?
அறிமுக நிலையில் இருக்கும் பயனருக்கு, அனைத்துமே சற்று குழப்பமாகத் தான் தோன்றும். ஆங்கில மொழியில் இருக்கும் thesaurus போல, நமது தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கான முதல் முயற்சி இது, என்பதனை நாம் தான் பயனருக்கு உணர்த்த வேண்டும்.
வேண்டுமானால் படிவப் பக்கத்தில் பொருள், விளக்கம், மொழிபெயர்ப்புகள் மட்டும் வைத்துக்கொள்ளலாம். சொல்வளப்பகுதி வேண்டாம். பிறவற்றினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை நான் செய்கிறேன் அல்லது பல சொற்களைப் பார்க்கச்சொல்லி, நாம் பயனர்களை கேட்டுக்கொள்ளலாம்.
நடைமுறையில், ஒரு சொல்லுக்கு 3 சொல்வளச்சொற்கள் எழுதுவதே, என் அனுபவத்திற்கு(1000சொற்களுக்கு மேலிருக்குமென்று நினைக்கிறேன்.) சற்று சிரமமாக இருக்கிறது. அதிக சொற்களை வளமுடன் எழுதும் பழ.கந்தசாமியவர்களும், 5சொல்வளச்சொற்களுக்கு மேல் எழுதுவதில்லை. அதிகம் எழுதுவோருக்கு, நான் துணை நிற்பேன். ஒவ்வொரு சொல்லுக்கும், அடைப்பு குறிகளும், வளைவு குறிகளும் இடுவது சிரமமாக இருந்ததால், இம்முறையை ஆலோசித்தே செய்கிறோம்.
{{சொல் வளப்பகுதி}} என்பதன் மூலம் எண்ணிக்கையில்லாவகையில் எழுத முடியும்.ஆனால் அதில் ஒவ்வொரு முறையும், அடைப்பு குறிகள்,வளைவுகுறிகள் இட வேண்டிய நிலைத் தோன்றும்.
தொகுத்தல் கட்டத்தை முதன்முதலில் நான் பார்த்த போது, ஒன்றுமே புரியவில்லை. பலர் சொன்னார்கள் எந்த இணையப் பக்கத்தில் எழுதுவதாக இருந்தாலும், html தான் அடிப்படை என்று. நான் பின்பற்றியது யாதெனில், பல சொற்களைப் பார்த்து அதன் வடிவமைப்பைக் கற்றேன். தொடர்ந்து பலர் ஒவ்வொன்றாக புரிய வைத்தனர். தொடர்ந்து ஈடுபடும் போது, பல நுட்பமான முறைகள் தினம் என்னுள் மலருகிறது.--த*உழவன் 06:42, 4 ஆகஸ்ட் 2010 (UTC)