வாழைப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாழைப்பூ
வாழைப்பூ
வாழைப்பூ மடல்
பொருள்
  • வாழைப்பூ(பெ) - வாழைமரத்தின் கொத்துப்பூ அல்லது வாழைப்பொத்தி
  • தா.இயல்-பெ--Musa Sapientum-Flower
மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

விளக்கம்

மருத்துவ குணங்கள்: வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, பயித்தியம், கபாதிக்கம்,உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், பிரமேகம் இவைகளை நீக்கும்... சுக்கிலவிருத்தியைத் தரும்.

உணவாகவும் மருந்தாகவும்: இதைப் பொரியலாகவோ அல்லது துவரம்பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவோ செய்து சாப்பிட்டால் உஷ்ணபேதி,இரத்தமூலம், சீதபேதி இவை போகும்...இந்தப்பூவை இடித்துச் சாறெடுத்து தயிர்கூட்டிப் பெண்களுக்குக் கொடுத்தால் சூதக வயிற்று வலி, பெரும்பாடு போகும்...இதை மருத்துவ நெய்களில் கூட்டுவதுமுண்டு...

  • மத சம்பிரதாயத்தில்: மாத்துவ சம்பிரதாயத்தினர் தங்கள் நெற்றியில் அணியும் கருப்பு மையை வாழைப்பூ மடலைக் கருக்கித் தயாரித்துக்கொள்ளுகிறார்கள்.
  • வாழைப்பூவை சமையலுக்குத் தயார் செய்யும்பொது ஒவ்வொரு மடலின் கீழிருக்கும் பூச்சீப்பில் ஒவ்வொரு பூவின் நடுவிலிருக்கும் காம்புப் போன்ற காளான்களை நீக்குதல் அவசியமாகும். இடதுபக்கம் காணும் படத்தில் வாழைப்போத்திலிருந்து வெளியே தெரியும் பூச்சீப்பை காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழைப்பூ&oldid=1978558" இலிருந்து மீள்விக்கப்பட்டது