அந்தராத்மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தராத்மா(பெ)

  1. உள்மனம்; மனம்
  2. பரமான்மா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. inner mind; mind
  2. indwelling soul
விளக்கம்
பயன்பாடு
  • உலகம் என்ன சொன்னாலும் நான் என் அந்தராத்மா சொன்னபடித்தான் நடப்பேன்’ என்ற வரியை காந்தியின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணலாம். (காந்தியின் திமிர், ஜெயமோகன்)
  • 1945-ம் ஆண்டு மே மாத இறுதியில் விமான விபத்தில் நேதாஜி இறந்துபோன தகவலை நம்ப மறுப்பவர்கள் அதிகம். 'போஸ் உயிருடன் இருக்கிறார். எங்கோ மறைந்து இருக்கிறார் என்று என்னுடைய அந்தராத்மா சொல்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. (ஜூனியர் விகடன், 24-ஏப்ரல் -2011)
  • ஒவ்வொரு கட்டுரையும் பாசமும் நேசமும் கலந்த ஒரு மனிதனின் அந்தராத்மா பேசுவதுபோல் இருக்கிறது. மனசாட்சி பேசும்போது அங்கே மனிதனின் நிர்வாணம் ரசிக்கும்படியாக இருக்கும். (இந்த வராம் கலாரசிகன், தமிழ்மணி, 29 சன 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆத்மா - ஆன்மா - மனம் - உள்மனம் - பரமான்மா - அந்தர் - அந்தரம்

ஆதாரங்கள் ---அந்தராத்மா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தராத்மா&oldid=1986547" இலிருந்து மீள்விக்கப்பட்டது