ஆண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆண்டை(பெ)

  1. எசமானன்
    • ஆண்டை கூலியைக் குறைத்தால், சாம்பான் வேலையைக் குறைப்பான்
  2. ஆசிரியர், பெற்றோர்
  3. அவ்விடம்
  4. தேட்கொடுக்கி
  5. அழிஞ்சில்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. master, lord, landlord, used by low castes in reference to their feudal chief or to one of a superior caste
  2. teacher, parent
  3. that place
  4. indian turnsole
  5. sage-leaved alingium
  6. parent
விளக்கம்
  • ஆண்டகை என்பதன் மருவிய சொல். ஆண்டை இன்றும் வழக்கில் உள்ள சொல். பண்ணையாரை ஆண்டை என்பார்கள்.
  • கீழ் தஞ்சையில் பண்ணையாட்கள் ஆண்டை என்றும் பகுதி மக்கள் மிராசுதார் என்று அழைப்பார்கள். அவருக்குச் சில கிராமங்களே சொந்தமாக இருக்கலாம். அவர் குடும்பம் இருக்கும் கிராமம் உள்கிராமம் அந்த கிராமத்தில் இருக்கும் மற்றவர்கள் குடிபடைகள். மிராசுதாரருக்கு உள்கிராமம் மட்டும் மூவாயிரம் ஏக்கர் வரைக்கும் இருக்கும்.மூன்று ஏக்கரானாலும், மூவாயிரம் ஏக்கரானாலும் அவர் மிராசுதாரக அழைக்கப்படுகின்றனர். மன்னனாகவே இருந்தாலும் தஞ்சையை ஆண்டவர்களை ராஜா மிராசுதார் என்று சொல்வதுண்டு.

(இலக்கியப் பயன்பாடு)

  • அவனின் மனைவியின் உளத்தை ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ, அடிமைப் பெண்கதியே (பாரதிதாசன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டை&oldid=1994945" இலிருந்து மீள்விக்கப்பட்டது