ஆமணக்கு இலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆமணக்கு இலை
ஆமணக்கு இலை
ஆமணக்கு இலை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

*Ricinus Communis--Leaves--(தாவரவியல் பெயர்)

ஆமணக்கு இலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. விளக்கெண்ணெய்ச் செடியின் இலைகள்
  2. முத்துக்கொட்டைச் செடியின் இலைகள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. leaf of castor plant

மருத்துவ குணங்கள்[தொகு]

ஆமணக்கின் இலையால் காமாலை, மூலக்கடுப்பு, வயிற்று வலி நீங்கும்...குழந்தைகளுக்குப் பாலூட்டும் பெண்களுக்குப் பாற்சுரப்பு உண்டாக்கும்...

பயன்படுத்தும் முறை[தொகு]

  1. ஆமணக்கு இலையின் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்பனலில் வதக்கிப் பால் வற்றியப் பெண்களின் முலைகளுக்கு வைத்துக்கட்ட பாற்சுரப்பு உண்டாகும்...
  2. இந்த இலையை சிறு சிறு துண்டுகளாக அரிந்து சிற்றாமணக்கு நெய் விட்டுப் பிசறி வதக்கி சீலையில் முடிச்சுக் கட்டித் தாளக்கூடியச் சூட்டில் ஆசனத்திற்கு ஒற்றடம் கொடுத்து, பின்னர் அந்த இலையையே ஆசனத்தில் வைத்துக்கட்டினால் மூலக்கடுப்பு நீங்கும்...
  3. இதே முறையில் தயாரித்த சூடான இலையைக் கீல்வாதங்களுக்கும், வாதரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுத்து, அதனையே வைத்துக்கட்ட நன்மையுண்டாகும்...
  4. துளிர் இலையைச் சிற்றாமணக்கு நெய் தடவி, அனலில் வாட்டி, உந்தியில் வைத்துக்கட்ட வயிற்றுவலி போகும்..
  5. இதன் இலையோடு சமனளவு கீழ்க்காய்நெல்லி இலையைக் கூட்டி அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவு காலையில் தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் கொடுத்து, நான்காம் நாள் சுகபேதி சூரணம்..[1]..கொடுத்தால் காமாலை குணமாகும்...



( மொழிகள் )

சான்றுகள் ---ஆமணக்கு இலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆமணக்கு_இலை&oldid=1232357" இலிருந்து மீள்விக்கப்பட்டது