ஆள் கண்ட சமுத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆள் கண்ட சமுத்திரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆள் கண்ட சமுத்திரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வேலை வாங்கும் குணம் கொண்டோர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tendency to extract work always from others

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...சாதாரணமாகச் சிறு அலைகளோடு அமைதியாயிருக்கும் கடலிலும், கரையில் மக்கள் கூட்டமாகக் கூடினால், அலைகள் பெரியதாக எழுந்து ஆர்ப்பரிக்குமாம்...அதைப்போலவே சில நபர்களும் தாம் சொன்னதைக் கேட்பவர்களைக் கண்டுவிட்டால் உட்கார்ந்த இடத்திலிருந்தே தாம் செய்யாமல் விட்ட வேலைகளை அவர்களைச் செய்யும்படி ஏவிக்கொண்டேயிருப்பராம்...அத்தகைய நபர்களை 'ஆள் கண்ட சமுத்திரம்' என்று குறிப்பிடுவர்.

பயன்பாடு[தொகு]

  • நாராயணன் வீட்டிற்கா போகிறாய்? அவ்வளவுதான்! அவனொரு பெரிய ஆள் கண்ட சமுத்திரமாயிற்றே. அதைச் செய், இதைச் செய் என்று உன்னைப் பிழிந்து எடுத்துவிடப் போகிறான் ! ஜாக்கிரதை !
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆள்_கண்ட_சமுத்திரம்&oldid=1226108" இலிருந்து மீள்விக்கப்பட்டது