இகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

உரிச்சொல்[தொகு]

இகல்

 1. வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு).(பெ)
 2. மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு. சேது வந்த. 12).(வி)
 3. போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக. 904). (வி)
 4. ஒத்தல். குலிகமொ டிகலிய வங்கை (நன். 268, மயிலை.).(வி)
 5. திருக்குறளில் 'இகல்வேந்தன்' என வலிமை பொருந்திய மன்னனை வள்ளுவர் குறிக்கிறார்.(வி)
 6. பகை. (திருமுரு. 132.) (பெ)
 7. போர். இகன்மிகநவின்று (பரி பா. 6, 28).(பெ)
 8. சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து (சி. போ. பா. மங்கல. 1).(பெ)
 9. அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா. 50, 5).(பெ)
 10. புலவி. இகலினிகந்தாளை (பரிபா. 9, 36).(பெ)
மொழிபெயர்ப்புகள்
 1. போர்
 2. சிக்கல்
 3. அளவு
 4. ஒப்பு
 5. மூட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இகல்&oldid=1902737" இருந்து மீள்விக்கப்பட்டது