இஞ்சித்தைலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இஞ்சி
பசும்பால்
எள்-நல்லெண்ணெய் எடுக்கும் வித்துக்கள்
நல்லெண்ணெய்

பொருள்[தொகு]

  • இஞ்சித்தைலம், பெயர்ச்சொல்.
  1. இஞ்சியில் தயாரித்த மருந்து எண்ணெய்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicated oil prepared with ginger.


இஞ்சித்தைலத்தால் தீரும் நோய்கள்[தொகு]

இந்த தைலத்தால் நீர்ப்பீநசம், ஜலதோஷம், தலைவலி, கழுத்து நரம்பு இசிவு, சிரபாரம், அடுத்தடுத்து வரும் தும்மல், முதலிய பிணிகள் போகும்...


இஞ்சித்தைலம் காய்ச்சும் முறை[தொகு]

நன்றாக முற்றிய இஞ்சியின் மேற்றோலை நீக்கி அம்மியில் வைத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுக்கவும்...சாற்றைத் தெளியவைத்துக் கலங்காமல் வடித்து அதற்குச் சம அளவு பசுவின் பால் அல்லது முலைப்பாலோடுக் கூட்டவும்... இவற்றின் மொத்த எடைக்குச் சமமான நல்லெண்ணெய்யோடு சேர்த்து ஒரு பழகிய மட்பாண்டத்திலிடவும்...பிறகு அதை அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து வண்டல் மெழுகுபதம் வரும்போது கீழிறக்கி ஆறவிட்டுப் புட்டியில் சேகரித்து வைக்கவும்...இந்தத் தைலமே இஞ்சித்தைலம் எனப்படுகிறது...இந்தத் தைலத்தைக் கொண்டு வாரம் இரு முறை தலைக் குளித்துவர மேற்சொன்னப் பிணிகள் தீரும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=இஞ்சித்தைலம்&oldid=1212190" இலிருந்து மீள்விக்கப்பட்டது