இடிக்கொள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இடிகொள்ளுச்செடி
இடிகொள்ளுச்செடி

பொருள்[தொகு]

  • இடிக்கொள்ளு, பெயர்ச்சொல்.
  1. காட்டுக்கொள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. Black horse-gram

மருத்துவ குணங்கள்[தொகு]

இடிக்கொள்ளால் படர்தாமரை, ஆண்குறிகளில் உண்டாகும் விரணம்,கண்ணோய், மலக்கட்டு ஆகிய இவைகள் போகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

  1. இடிக்கொள்ளின் விதைகளை ஒரு தேயாத சந்தனக்கல்லின்மீது இரண்டொருத் துளி சுத்தநீர் விட்டு உறைத்துக் கண்களுக்கு அஞ்சனமாகத் தீட்டக் கண்பார்வை அதிகமாகும்...
  2. இதை நன்றாக மைபோல அரைத்துச் சீலையில் தடவி ஆண்குறியில்வரும் விரணங்களுக்குமேல் அழுந்தப் போட்டுவைத்தால் விரணம் ஆறும்...
  3. இதன் சுத்தமான மாவைக் கருகாமல் நெருப்பனலில் சிறிது வெதுப்பி கண் இரப்பைகளில் ஓர் உளுந்து அளவுத் தூவிவந்தால் சீழ் பிடித்த விரணங்கள் ஆறும்...
  4. இதனைப் பழச்சாறுவிட்டு அரைத்துப் படைகளுக்குத் தடவ ஊறல் அடங்கி ஆறிவிடும்...
  5. இதனை வேகவைத்து எடுத்த நீரில் போதிய அளவு உப்பு, புளி, மிளகாய்க் கூட்டி இரசம் செய்து, தாளித்து, பெண்கள் சாதத்தில் உபயோகப்படுத்தினால் முலைப்பால் சுரக்கும்...[1]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடிக்கொள்ளு&oldid=1211854" இலிருந்து மீள்விக்கப்பட்டது