இராத்தங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்

இராத்தங்கு

வினை[தொகு]

  • இரவில் பிறர் வீட்டில் தங்கு....

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. night staying in other's house
  2. sleep over

விளக்கம்[தொகு]

  • பேச்சு மொழி--பேச்சில் 'ராத்தங்கு'...வெளியூரில் அல்லது உள்ளூரில் வெகு தூரத்தில் இருக்கும் உறவினர்/நண்பர் வீட்டிற்குக் காலையில் சென்று இரவு தன் வீட்டிற்கு வந்துவிடலாம் என்று செல்பவர் சூழ்நிலை காரணமாக அன்று இரவு உறவினர்/நண்பர் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள்தான் தன் வீட்டிற்குத் திரும்பி வருவார்...இந்தச் செய்கையை இராத்தங்கு என்பர்...அதாவது இரவில் தன் வீடு அன்றி வேறு வீட்டில் தங்குதல் என்பதாம்...

பயன்பாடு[தொகு]

  • நான் என்ன செய்வது... நேற்று இரவே வீட்டிற்குத் திரும்பி விடலாம் என்றுதான் மாமா வீட்டிற்குச் சென்றேன்...ஆனால் திரும்பிவரக் கடைசிப் பேருந்தைத் தவற விட்டுவிட்டேன்...அதனால்தான் அங்கேயே இராத்தங்கிவிட்டு இப்பொழுது வருகிறேன்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இராத்தங்கு&oldid=1218411" இலிருந்து மீள்விக்கப்பட்டது