இலந்தை மரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இலந்தை மரம்
இலந்தைப் பழங்கள்
இலந்தை இலை, பச்சை மற்றும் உலர்ந்த பழங்கள்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

இலந்தை மரம், பெயர்ச்சொல்

  1. ஒரு கனிதரும்,மருத்துவகுணமுள்ள மரம்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. jujube tree


விளக்கம்[தொகு]

  • இலந்தை + மரம் = இலந்தை மரம்...ஒரு மருத்துவ குணமுள்ள தாவரம்...இதன் பழங்கள் செம்பழுப்பு நிறத்தில் சற்றுப் பெரிய கொட்டைகளை உடையதாகவும், இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டதாயும், சிறு உருண்டைவடிவத்தில் இருக்கும்...இம்மரத்தின் பழங்கள் உண்ணக்கூடியவையே...மேலும் இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது...

மருத்துவ குணங்கள்[தொகு]

இலந்தைமர வேர் அயர்ச்சியைப் போக்கி தீபாக்கினியை உண்டுபண்ணும்...கொழுந்திலை சீழ் மூலம்,இரத்தாதிசாரம், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் ஆகிய பிணிகளை போக்கும்.

உபயோகிக்கும் முறை[தொகு]

  1. கால் முதல் அரை ரூபாய் எடைவரை இலந்தைமரத்துப் பட்டையை தயிரில் அரைத்தோ அல்லது துளிர் இலைகளை நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்தோ கொடுத்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும்...இவ்வாறு இரண்டு மூன்று முறை உண்பதற்குள்ளாகவே குணம் தெரியும்...
  2. இதன் பட்டையை நன்றாகத் தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்துச் சிரங்குகள், காயம்பட்ட விரணங்களின் மேல் தடவிக்கொண்டுவர ஆறும்...
  3. இலவம் பட்டையை பஞ்சுபோல் நசுக்கி அரை பலம் அளவு ஒரு மட்கலயத்தில் போட்டு அரை படி தண்ணீர் விட்டு வீசம் படியளவுக்குச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வேளைக்கு ஓர் அவுன்சு வீதம் தினமும் மூன்று வேளைகள் கொடுத்துவந்தால், சுரத்தினால் உண்டான அழற்சி, சந்நி போகும்...
  4. கொழுந்து இலவம் இலையை நன்றாக அரைத்து எந்தவிதமான கட்டிகளுக்கும் மேல்வைத்துக் கட்டிக்கொண்டுவர அடங்கும்...இலந்தைப் பழத்தின் குணங்களை அறிய இங்கு பார்க்கவும்[1]



( மொழிகள் )

சான்றுகள் ---இலந்தை மரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலந்தை_மரம்&oldid=1986552" இலிருந்து மீள்விக்கப்பட்டது