ஈசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஈசன், பெயர்ச்சொல்.

  1. இறைவன், தலைவன்
மொழிபெயர்ப்புகள்
  1. god, lordஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112)

திருமந்திரம்


திருவாசகம்[தொகு]

  • ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

  • நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி

ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

  • இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க

அரிய அதில் அரிய அரியோன் காண்க

  • கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க

யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55

  • தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

ஔவையார் தனிப்பாடல்கள்[தொகு]

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின்

மூதுரை[தொகு]

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். (27)


( மொழிகள் )

சான்றுகள் ---ஈசன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈசன்&oldid=1969074" இலிருந்து மீள்விக்கப்பட்டது