உடம்படுமெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உடம்படுமெய்(பெ)

  1. நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • consonantal glide "y" or "v" which comes in combination of two vowels to prevent a hiatus
விளக்கம்
  • கோவிலா? கோயிலா?
தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ) கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ + வ்+ இல் = கோவில் என்பதே சரியானது.
கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று "ய்" உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால்,
"இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்
"ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்"
கோ-வில் ஓகாரம் இருப்பதால் "வ்" உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே.
மணி + அடித்தான் = மணியடித்தான் (இகரத்தின் முன் "ய்" உடம்படு மெய் வந்துள்ளது.
தே + ஆரம் = தேவாரம் (ஏகாரத்தின் முன் வ் உடம்படு மெய் வந்தது.
அவனே + அழகன் (ஏகாரத்தின் முன் "ய்" உடம்படுமெய் வந்தது. அவனேயழகன் என்றானது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 Dec 2010)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---உடம்படுமெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நிலைமொழி - வருமொழி - உடன்படுமெய் - உயிரெழுத்து - மெய்யெழுத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடம்படுமெய்&oldid=1995351" இலிருந்து மீள்விக்கப்பட்டது