உயிரளபெடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உயிரளபெடை,பெயர்ச்சொல்.[தொகு]

  1. எழுத்து மாத்திரை மிக்கொலித்தல்.
  2. உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. A vowel which sounds with more than its normal quantity, which fact is indicated in writing by placing a short vowel of the class after the long vowel
விளக்கம்
  • உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும், தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
  • மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
(எ. கா.)
  1. ஓஒதல் வேண்டும் (முதல்)
  2. கெடுப்பதூஉம் கெட்டார்க்கு ( இடை)
  3. நல்ல படாஅ பறை (கடை)

(இலக்கியப் பயன்பாடு)

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ -நன்னூல்



( மொழிகள் )

சான்றுகள் ---உயிரளபெடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரளபெடை&oldid=998681" இலிருந்து மீள்விக்கப்பட்டது