உள்ளடக்கத்துக்குச் செல்

உரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உரவு (பெ)

  1. வலிமை
  2. அறிவு
  3. பரத்தல்
  4. மிகுதி, மிகுகை
  5. உளத்திட்பம்
மொழிபெயர்ப்புகள்
  1. strength, firmness
  2. wisdom
  3. spreading, expanding
  4. plenty, abundance
  5. resolve
விளக்கம்

உரவு என்பது உரம், உரத்துப்பேசுதல் போன்ற சொற்களில் உள்ளது போலவே வலிமை என்னும் அடிப்படைப் பொருள் கொண்டது. பிற பொருள்களாகிய அறிவு, பரத்தல், மிகுதி உளத்திட்பம் ஆகியவையும் வலிமை என்னும் அடிப்படைப் பொருளின் வளர்ச்சி யாகும்.

பயன்பாடு

உரவு இல்லையேல், வாழ்வு வீண்

(இலக்கியப் பயன்பாடு)

  • உரவுச்சினந் திருகிய (புறநானூறு. 25, 3)
  • உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல் (குறுந்தொகை 244) - வலிமையான யானை போல் வந்து இரவில் கதவைத் திறக்கு முயல்தல்


( மொழிகள் )

சான்றுகள் ---உரவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


 :(உரவு), (உறவு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரவு&oldid=1110578" இலிருந்து மீள்விக்கப்பட்டது