உள்ளடக்கத்துக்குச் செல்

ஏட்டிக்குப் போட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏட்டிக்குப் போட்டி

சொல் பொருள்

ஏட்டி – விரும்புகின்ற ஒன்று. போட்டி – விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று.

விளக்கம்

ஏடம், ஏடணை என்பவை விருப்பம்; விரும்பும் ஒன்று ‘ஏட்டி’யாம்; விரும்பி முயலும் ஒன்றற்கு எதிரிடையாக மற்றொன்று முட்டும்போது தானே போட்டி தொடங்குகின்றது. போட்டியில் நல்ல போட்டியும் அல்ல போட்டியும் உண்டு. ஏட்டிக்குப் போட்டி உள்ளச் சிறுமையால் ஏற்பாடுவதாம்.

போட்டிக்கு முடிவு உண்டோ? ‘போட்டா போட்டி’யாகி ஒன்றன் அழிவும், ஒன்றன் ஆக்கம் போன்ற அழிவும் கூடி இரண்டும் அழிந்து படவேயாகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏட்டிக்குப்_போட்டி&oldid=1913221" இலிருந்து மீள்விக்கப்பட்டது