ஒப்புரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒப்புரவு (பெ)

பொருள்
  1. ஒற்றுமை; பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம்
  2. இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல்; ஒத்துப் போகும் மெல்லியல்பு
  3. முறைமை (ஒழுங்கு) கடைப்பிடித்தல்; உலகப் பொது ஒழுகலாறு (ஒழுக்க நடைமுறை)
  4. உலகநன்மை
  5. வேளாண்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • agreement; union; fitting manner of helping others
  • conduct according to accepted norms
  • (sacrament of) reconciliation
  • (formerly) confession
விளக்கம்
  • ஒப்பு, ஒத்து என்பன ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவை. ஒற்றுமை என்பது ஒத்து ஒன்றாய் இருக்கும் தன்மை. உலகத்தோடு, உலக நல்லொழுக்கத்தோடு ஒன்றி இருக்கும் முறைமைக்கும் வழங்குகின்றது. ஒப்புரவாயிருத்தல் என்றால் நலமாய் இருத்தல் (இணக்கமான நல்லுறவில் இருத்தல்).
  • (கிறித்தவ வழக்கில்) திருமுழுக்குப் பெற்றபின் ஒருவர் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, அவரைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கின்ற கிறித்தவ சமயச் சடங்கு 'ஒப்புரவு அருட்சாதனம்' என்று அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
  • கடவுள் கிறித்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார் (2 கொரி 5:18)திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒப்புரவு--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ்ச் சொற்பிறப்பிய அகரமுதலித் திட்டம், தரமணி, சென்னை 600 113.
  • கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்புரவு&oldid=1979701" இலிருந்து மீள்விக்கப்பட்டது