ஓரி
Appearance
பொருள்
ஓரி(பெ)
- ஒலிவாங்கி = microphone
- கொல்லிமலையை ஆண்ட, கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்
- கிழநரி
- ஆண்நரி
- ஆண்முசு
- ஆண் விலங்குகள் (பொதுவாக)
- ஆண்மயிர்
- புறமயிர்
- காளிவாகனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- microphone
- a king mentioned in ancient Tamil literature
- an old jackal
- male jackal
- the male of the red monkey
- the male of beasts in general
- a man's knot of hair
- hair on the body
- the conveyance of Kali
விளக்கம்
[தொகு]- ஓர்தல் என்பதற்கு கேட்டல் என்று பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி. “ஓர்தல்” என்றால் அறிதல் என்றும் பொருள். “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” என்பது மலைபடுகடாம் (பாடல் வரி: 448) இதன் பொருள் பறவை ஒலியைக் “கேட்டு”ச் செல்க என்பது. புறஒலியைக் கேட்டு அல்லது உள்வாங்கி ஆம்ளிபையருக்கு அனுப்பி, ஒலியின் அளவைப் பெருக்கி ஸ்பீக்கர் வழியாக வெளியிடச் செய்கிறது “ஓரி” என்னும் மைக். “ஓர்தல்” செய்யும் microphone கருவியைத் தமிழில் ஓரி என்கிறோம்.ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம்வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/2015/12/microphone13.html
இலக்கியமை
[தொகு]- “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்....”என்கிறது பட்டினப்பாலை (பாடல் வரி :113) (ஓர்த்தல் = உள்வாங்குதல், கேட்டல்)
- ”குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்...” என்று பேசுகிறது மலைபடுகடாம் ! (பாடல் வரி : 23)
- “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” மலைபடுகடாம் இன்னொரு இடத்தில் சொல்கிறது (பாடல் வரி: 448)
- ”இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்....” என்பது முல்லைப்பாட்டு. (பாடல் வரி : 88)
- “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா....” என்பது திருக்குறள் (357)
(இலக்கணப் பயன்பாடு)
- அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிப்பவும் (பொருள்: நரி, பட்டினப்பாலை)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/2015/12/microphone13.html
வல்வில் - வல்வில் ஓரி - கொடை - வள்ளல் - கொடைவள்ளல் - கடையேழு வள்ளல்கள் - இடையேழு வள்ளல்கள் - முதல் ஏழு வள்ளல்கள்