உள்ளடக்கத்துக்குச் செல்

கடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கடித்தல்:
இவர் பல்லாற்கடித்து உண்கிறார்
கடித்தல்:
இவரும் பல்லாற்கடித்து உண்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கடித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • (கடி+த்தல்)
  1. பல்லாற்கடித்தல்
    (எ. கா.) கடித்தவாயிலே திருவாச. 41, 3).
  2. வடுப்படுத்துதல்
    (எ. கா.) பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே (கலித். 96).
  3. கயிறுமுதலியன இறுகப்பிடித்தல்
    (எ. கா.) அரைநாண் இடுப்பிற் கடித்துக்கொண்டிருக்கிறது
  4. துண்டித்தல்
    (எ. கா.) கடித்துக் கரும் பினை (நாலடி, 156).
  5. விடாதுபற்றுதல்
    (எ. கா.) அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக் கடித்துக் கொண்டிருக்கிறான். (உள்ளூர் பயன்பாடு)

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. கமழ்தல்
    (எ. கா.) துழாய்க் கடிக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).
  2. சித்தித்தல்
    (எ. கா.) கடிக்கும் பணியறமெல்லாம் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்

(Verb-tr)

  1. to bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ
  2. to hurt, pinch, gall, as new shoes, new ring
  3. to be too tight
  4. to stick to, cling fast

(Verb-intr)

  1. to waft an aroma; to emit fragrance
  2. to be successful, consummated
( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=கடித்தல்&oldid=1969372" இலிருந்து மீள்விக்கப்பட்டது