கடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கடுப்பு:
என்றால் கருவூமத்தை
கடுப்பு:
என்றால் கருவூமத்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • கடுப்பு, பெயர்ச்சொல்.
 1. கடுக்குகை
  (எ. கா.) கடுப்புடைப் பறவைச் சாதியன்ன (பெரும்பாண். 229).
 2. நோவு
  (எ. கா.) முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே (ஈடு. 1, 1, 1).
 3. வெகுளி
  (எ. கா.) கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49).
 4. வேகம்.
  (எ. கா.) மண்டு கடுப்பினிற் பட ரும் வாம்பரி (சேதுபு.கத்துரு. 15).
 5. ஒப்பு (திவா.)
 6. செருக்கு
  (எ. கா.) அவன் கடுப்பை இறக்கிவிட்டான். (W.).
 7. கருவூமத்தை (மலை.)
 8. முகஞ்சுளிக்கை
  (எ. கா.) ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?..
 9. வெறுப்பு
 10. எரிச்சல்
  (எ. கா.) இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துரா (திரைப்பாடல்).
 11. கொண்டைவலையிற் கட்டுங் கோல் (உள்ளூர் பயன்பாடு)
 12. கடுக்காய்வேர் (வை. மூ.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp
 2. aching, pain, throbbing
 3. ire, wrath
 4. speed, rapidity
 5. similarity, likeness
 6. pride
 7. purple stramony
 8. twitching the face, to indicate either displeasure or anger
 9. hatred,
 10. irritation
 11. pole attached to the fishing net koṇṭaivalai--[கொண்டைவலை]
 12. root of gallnut


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுப்பு&oldid=1432617" இருந்து மீள்விக்கப்பட்டது