கட்டுப்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை
கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டுப்படி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. செலவிடும் சக்தி
  2. இழப்பில்லாமல் சிறிது இலாபகரமாக அமைவது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. affordability to spend.
  2. being worth while
  3. just sufficient

விளக்கம்[தொகு]

  • ஒருவரின் செலவிடும் சக்தியைக் குறிப்பிடும் சொல் இது...ஆகும் அல்லது ஆகாது என்ற சொல்லுடன் சேர்த்தே உபயோகத்தில் உள்ளது...ஒருவருடைய வருவாய்க்குள் கட்டுப்படும் செலவினம் என்று பொருள்...
  • கொள்முதல் விலைக்குமேல் சற்றே இலாபத்திற்கு பொருட்களை விற்பது, கட்டுப்படி ஆகும் நிலையாகும்

பயன்பாடு[தொகு]

  1. இராமன் அந்தச் சிறப்பங்காடியில் கண்டதை நிறைய வாங்கிவிட்டான் என்று நீ ஏன் சொல்லுகிறாய்?..அவனுக்கு அது கட்டுப்படி ஆகும்...வாங்கினான்...உனக்கென்ன?
  2. எனக்கு இவ்வளவுச் செலவு செய்யக் கட்டுப்படி ஆகாது.
  3. அவனுக்கு சாத்துக்குடிப் பழங்களை ஒன்று ஐந்து உரூபாய்க்கு விற்றால்தான் அவன் கொள்முதல் செய்த விலைக்குக் கட்டுப்படி ஆகும்.



( மொழிகள் )

சான்றுகள் ---கட்டுப்படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டுப்படி&oldid=1217799" இலிருந்து மீள்விக்கப்பட்டது