கன்னக்கோல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கன்னக்கோல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- iron-crow of thieves
விளக்கம்
பயன்பாடு
- செங்கோல் பிடிக்கும் ஒருவன் கன்னக்கோல் பிடிக்கும்
- கள்வனென்றால் நீதியெங்கு குடியிருக்கும்? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ' கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ' கப்பல் பயணத்தில் கப்பல் மூழ்கி, பொருள் மொத்தத்தையும் இழந்து, ஒருவன் ஏழையாகி விடுவது என்பது அந்த காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்போது அவனைப் பார்க்கும் பெரியவர்கள் கப்பலே கவிழ்ந்து போனாலும் சரி' கன்னத்தில் கை வைக்காதே' என்று சொல்வார்கள். அது ஆறுதல் மொழி அல்ல. அவர்கள் அப்படி சொன்ன கன்னம் என்பது நமது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல. அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோல் என்ற ஒரு ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள் . அதனைத் தான் நம் பெரியவர்கள் தொழிலில் எவ்வளவு பெரிய பொருள் இழப்பு நேரிட்டு ஒருவன் ஏழையானாலும் சரி, அடுத்தவர்களின் பொருளை அவன் திருடிவிடக்கூடாது என்று சொல்வதற்காக 'கன்னக் கோல் என்ற ஆயுதத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காக சுருக்கமாக கன்னம் என்று சொல்லி வைத்தார்கள்.
ஆதாரங்கள் ---கன்னக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கன்னம் - கோல் - களவு - கத்தரிக்கோல் - கொன்னக்கோல் - செங்கோல்