கிளாத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிளாத்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A sea-fish, rich brown; triacanthus strigilifer
விளக்கம்
பயன்பாடு
- காலரா பரவுவதற்கான முக்கியமான காரணம் கிளாத்தி [Triacanthus Strigilifer] என்ற மீன்தான் என்று சாமர்வெல் கண்டுபிடித்தார். வைகாசி, ஆனி மாத முதல் மழைக்காலம் முடிந்து ஆடி தொடங்கியதும் இது கடலில் பெருமளவுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். ஆறுகள் கடலில் கொண்டு சென்று கொட்டும் சேற்றுப்பரப்பில் முட்டைபோடுவதற்காக இவை மிகப்பெரிய தேசங்கள் போல பெருகிவருகின்றன. அடர்த்தியான சேற்றில் திளைத்து அதிலுள்ள கழிவுகளை உண்கின்றன. அவற்றில் தோல்கிளாத்தி என்ற வகை பெருமளவில் கிடைக்கும்.
- எழுபதுகளில் ரப்பர் வருவது வரைஆடிமாதம் குமரிமாவட்டத்தின் பஞ்சமாதம். அப்போது மலிவாகக் கிடைக்கும் கிளாத்தியை மக்கள் கூட்டம்கூட்டமாகச் சென்று வாங்குவார்கள். அரைக்கால் சக்கரத்துக்கு இருபது முப்பது கிளாத்தி கிடைக்கும். அதை வாங்கிவந்து கைக்குக்கிடைத்த காயுடனோ கிழங்குடனோ சேர்த்து வேகவைத்து உண்பார்கள். கிளாத்தியின் குடலிலும் இரைப்பையிலும்தான் காலரா கிருமிகள் இருக்கின்றன என்று சாமர்வெல் சொன்னார். ஆடிமாசத்தில் கட்டுக்கடங்காமல் பெருகும் ஈக்களால் அவை பரவுகின்றன. (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிளாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +