உள்ளடக்கத்துக்குச் செல்

குடிக்கூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • குடி + கூலி = குடிக்கூலி

பொருள்

[தொகு]
  • குடிக்கூலி, பெயர்ச்சொல்.
  1. வீட்டுவாடகை
  2. குடக்கூலி
  3. வியக்களை
  4. வாடகை (சென்னைமாகாணப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. house rent
  2. hire

விளக்கம்

[தொகு]
  • தாம் வசிப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள், பிறருக்குச் சொந்தமான வீட்டில் அவர்களுடைய அனுமதியுடன் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துக்கொள்வர்...அவ்வாறு வசிக்க, அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, அந்த வீட்டின் சொந்தக்காரருக்குக் குறிப்பிட்டக் காலத்திற்கொருமுறை கொடுக்கப்படும், நிர்ணயக்கப்பட்டு இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகை குடிக்கூலி அதாவது குடி இருக்கக் கூலி என்பதாம்...சென்னை வட்டார வழக்குப்படி தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு விடயத்திற்கும் தரப்படும் தொகை குடிக்கூலி என்றே அழைக்கப்படுகிறது...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிக்கூலி&oldid=1396130" இலிருந்து மீள்விக்கப்பட்டது