உள்ளடக்கத்துக்குச் செல்

குழிப்பந்தாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குழிப்பந்தாட்டம்:
பந்து குழியை நோக்கி அடிக்கப்படுகிறது
குழிப்பந்தாட்டம்:
குழியும், பந்தும்
குழிப்பந்தாட்டம்:
குழிப்பந்தை அடித்து முடித்த நிலையில் ஒரு வீரர்
(கோப்பு)
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்

[தொகு]
  • குழிப்பந்தாட்டம், பெயர்ச்சொல்.
  1. ஒரு மேனாட்டுவிளையாட்டு வகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. golf

விளக்கம்

[தொகு]
  • குழிப்பந்தாட்டம் எனும் விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் பிரித்தானியாவின் ஒரு மாநிலமான இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது...இதில் பந்தைத் தள்ளும்/அடிக்கும் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும்... இந்த அடிகோலினால் (கிளப்), குழியாட்டப் பந்தை மைதானத்திலுள்ள இடையூறுகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் சிறிய குழிகளுக்குள் தள்ளுவதே ஆட்டம்...பொதுவாக நன்கு பராமரிக்கப்பட்டு, கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஓர் ஆட்டமைதானம் (கோர்சு)...இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தள்ளுகை/தட்டுதல் அல்லது அடிகள் (Stroke) மூலம், பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவராவார்... ஒவ்வொரு குழிக்கும் ஒரு பார்-par அல்லது சமம் எனப்படும் மதிப்பு உண்டு...இது 3 இலிருந்து 5 வரை இருக்கும்...18 குழிகளுள்ள ஓர் ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் பார்-par சமம் ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு குறை (ஹண்டிகேப்) 0 ஆகும்... ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது குறை 3 ஆகும்...அதிகபட்சக் குழிகளுள்ள, மிகப்பெரிய ஆட்ட மைதானத்தில்,வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு...இந்தக் குழிப்பந்தாட்டம் வணிக உலகில் மிகவும் மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்...
  • இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை...இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது...தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குழிப்பந்தாட்டம்&oldid=1469427" இலிருந்து மீள்விக்கப்பட்டது