கேணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேணி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி அது. மூன்று வருஷமாக மழை பெய்யாமல் சுற்று வட்டாரத்துக் கேணிகளில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்ட போதிலும் செங்கோடன் கேணியில் மட்டும் தண்ணீர் சுரந்து கொண்டேயிருந்தது.... அவன் உண்டு, அவன் கேணி உண்டு, அவன் விவசாயம் உண்டு என்று வாழ்க்கை நடத்தி வந்தான் (பொய்மான் கரடு, கல்கி)
- கேணின்னாக் குளம்னு அர்த்தம். நகரத்தில், அதுவும் இந்த நங்கநல்லூரில் நீங்கள்ளாம் குளத்தைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த ஊரில் குளம் என்று அறியப்படுவது, குட்டை என்ற கணக்கில் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சிறியது. குளம் பார்க்கவேண்டுமானால், புதுக்கோட்டைக்குப் போகவேண்டும். அது குளம். குளம் என்றால் மிகப்பரந்துபட்ட நீர்நிலை என்று பொருள். ஏதோ இக்குனூண்டு தண்ணித்தொட்டி இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி கிணறும் இல்லை. (பெரிதினும் பெரிது கேள், ஹரி கிருஷ்ணன். தென்றல்)
(இலக்கியப் பயன்பாடு)
- கேணி யருகினிலே-தென்னைமரம்
- ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
- உலகின்பக் கேணி (பாரதியார்)
- வீட்டை நினைப்பாரோ? அவர்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கேணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +