கோவில்மணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கோவில்மணி
கோவில்மணி
கோவில்மணி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோவில்மணி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கோவிலின் பெரிய மணி.
  2. மிக விலை அதிகமானது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. temple bell
  2. expensiveness
  3. high cost

விளக்கம்[தொகு]

  1. கோவில்களில் பூசைக் காலங்களில் அடிக்க நிறுவப்பட்டிருக்கும் பெரிய அளவிலான மணிக்கு கோவில்மணி என்றுப் பெயர்...உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மணியின் நாக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்டக் கயிற்றை விட்டுவிட்டு இழுத்து , பூசைக் காலங்களில்,மங்களகரமான ஒலியை எழுப்புவர்...தற்காலத்தில் வேறு உபகரணங்களைக்கொண்டும் இயக்குகின்றனர்...இன்னும் சில கோயில்களில் மணியோசை எழுப்பும் மின்சாதனங்களையும் பொருத்தியுள்ளனர்...
  2. சென்னை வட்டாரத்தில் 'கொச்சை மொழியாக' மிக விலை அதிகம் என்றுக் குறிப்பிட கோயில்மணி என்பர்...சாதாரண விலையில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு அதிகமான விலை தரவேண்டியிருந்தால் அது கோயில்மணியைப் போன்றது!... நாம் சாதாரணமாகப் பார்க்கும் மணியைவிட கோயில்மணி மிகப் பெரியதாக இருக்கிறது அல்லவா?

பயன்பாடு[தொகு]

  1. அதிகாலையில் கோவில்மணியின் ஓசை கேட்க மிக இனிமையாக இருக்கிறது...
  2. அந்தக் கடையில் ஒன்றும் வாங்காதே!!...அங்கு எல்லாம் கோயில்மணிதான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவில்மணி&oldid=1222418" இலிருந்து மீள்விக்கப்பட்டது