க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம், பெயர்ச்சொல்.
  1. நிலையில்லா நடத்தை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ever changing behavioural feature of a person

விளக்கம்[தொகு]

  • இஃதொரு பேச்சு வழக்கு...இந்தக் கணம் சொன்னதை அடுத்த கணம் மறுப்பது...அடுத்த கணம் சொன்னதை அதற்கடுத்த கணம் மறுப்பது என்று நிலையில்லா நடத்தையை சுட்டும் ஒரு சொற்றொடர்...பேச்சுகளில்மட்டுமன்றி செயல்களிலும் இத்தகைய நிலையை குறிக்கும்...சித்தம் என்பது இயல்பான நல்லதொன்றாகவும், பித்தம் என்பது அதற்கு எதிரான தீயதொன்றாகவும் பொருள்படக்கூடியதென்பதால், அடிக்கடி மாறும் குணம், எப்போதும் நன்மை பயக்கக்கூடியதாகயிருத்தல் அவசியமில்யென்பதை க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம் எனும் சொற்றொடர் சொல்லாமற் சொல்லும்...

பயன்பாடு[தொகு]

  • முனுசாமி உனக்காக இந்தக் காரியத்தை செய்வதாக ஒப்புக்கொண்டுவிட்டானா?...அவனை நம்பியா இதை அவனிடம் ஒப்படைத்திருக்கிறாய்?... சாக்கிரதை!...அவனொரு க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்த(ம்) ஆசாமி...நடுவில் காலை வாரிவிட்டு ஓடிவிடப்போகிறான்!1