சத்துமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சத்துமா:
சத்துமா:
இது அரிசி மாவு--வறுத்த அரிசி மாவாக்கப்பட்டால் சத்துமா.
சத்துமா மூலப்பொருள்: பொட்டுக்கடலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சத்துமா, பெயர்ச்சொல்.
  • (சத்து+மா(மாவு))
  1. வறுத்த அரிசியின் மா/மாவு

விளக்கம்[தொகு]

  • சத்துப்பொருட்கள் நிறைந்த மாவானதால் இந்த உணவு சத்துமா எனப்படுகிறது...முன்பெல்லாம் அரிசியை வறுத்து மாவாக்கி சத்துமா என்று வீடுகளில் வைத்திருப்பர்...இது நோயாளிகளுக்கும், ஒருபொழுது போன்ற கன உணவை மறுக்கும் நேரங்களிலும், பசி தாங்காதவர்கள் நீர்ப்பதத்தில்/கஞ்சியாக உண்ணும் உணவாகும்...தற்காலத்தில் கேழ்வரகு,சோளம், பொட்டுக்கடலை, கம்பு, அரிசி, கோதுமை போன்ற எல்லாவகைத் தானியங்களைக்கொண்டும் சத்துமா உண்டாக்கப்படுகிறது...இன்னும் சிறந்ததாக முளைக்கட்டிய தானியங்களை உலரவைத்து அவற்றைக்கொண்டும் சத்துமா தயாரிக்கப்படுகிறது...சத்துமா ஊட்டச்சத்துகள் உடையதாகவும், எளிதில் செரிக்கக்கூடியதாகவும் இருப்பதால் மிகுந்த வரவேற்புடையதாக உள்ளது...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. flour of parched grain, especially rice, generally used in times of fasting


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்துமா&oldid=1879426" இலிருந்து மீள்விக்கப்பட்டது