உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகன்டா தேவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சந்திரகன்டா தேவி--வட இந்திய பாணியில்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சந்திரகன்டா தேவி, .

பொருள்

[தொகு]
  1. இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one of nine features of goddess durga--chandraghanta

விளக்கம்

[தொகு]
  1. புறமொழிச்சொல்....வடமொழி...चन्द्रघन्टा देवी....ச1-ந்த்3-ரக4-ந்டா1-தே-வி...சந்திரகன்டா தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஒரு அம்சம் சந்திரகன்டாதேவி என்பதாகும்....ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் மூன்றாம் நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்
  2. இந்த இறைவி தங்கமயமான அழகிய தோற்றம் கொண்டவள்...சிங்கத்தின் மீது அமர்ந்த திருக்கோலமாக மூன்று கண்களும் பத்து கரங்களும் கொண்டவள்... சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜெபமாலை, அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்...வீரத்தின் திருவுருவான இந்த தேவியை வழிபட்டால், சகல இடர்களையும் களைந்து மனதிற்கு தைரியத்தை அளிப்பாள்... சந்திரகன்டா தேவியை சித்திரகன்டா தேவி என்றும் சொல்வர்...
  3. மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா, மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திரகன்டா_தேவி&oldid=1220452" இலிருந்து மீள்விக்கப்பட்டது