சாதனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாதனம் (பெ)
- ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
- எண்ணம், கருத்து முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுவது உபாயம்
- பயிற்சி
- துணைக் கரணம்
- அனுமான உறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது
- உருத்திராக்கம் முதலிய சின்னம்
- இலாஞ்சனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- instrument; equipment; device; aid; contraption
- means, medium
- practice
- subsidiary cause
- reason leading to inference
- distinctive mark of Saivites, as Rudrakṣa beads, etc.
- seal, signet
விளக்கம்
பயன்பாடு
- மின்சார சாதனம்
- சினிமா என்பது அற்புதமான ஊடகம். படைப்புத் திறனும் |தொழில்நுட்பமும் சங்கமிக்கும் இடம். அடிப்படையில் அது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதே நேரத்தில் சிறந்த ஒரு கலைச் சாதனம். (குணங்குடியார் பாடற்கோவை, நாஞ்சில்நாடன்)
- தற்பொழுது தொலைக்காட்சி என்ற சாதனம் மக்களை தங்களோடு ஒட்டி வைத்திருக்கிறது. (டாவின்சி கோட், நடேசன்)
- எதுவாயினும் நமக்கான ஒரே தொடர்பு சாதனம் மொழிதான். மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமேயன்று – அது ஒரு கலாச்சார ரீதியிலான கூர்மையான ஆயுதம். (மொழியின் துல்லிய உலகம், சுப்ரபாரதிமணியன்)
- பிறரை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் மகளின் சிரிப்பும், பேச்சும் தான் இவருக்குச் சரியான சாதனம் போலும்! (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
- பெரிய மனிதர்களிடம் பழகி வெல்வதற்கு அனுசரித்துப் பேசுவதும் ஒரு சாதனம் என்று கருதியவராகத் தோன்றினார் அவர் (நெஞ்சக்கனல், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- சாதன மின்றி யொன்றைச் சாதிப்பார் (கைவல். தத்துவ. 11)
- பொதுவெனப்படுவது சாதன சாத்தியம் (மணி. 27, 29)
- தன்னுறு படைகளுஞ் சாதனஞ் செய்வோன் (கந்தபு. இரண்டா. யுத். 385)
- இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் (தேவா. 811, 3)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +