சாம்பிராணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாம்பிராணி(பெ)
- நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள்
- மூடன், மடையன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- incense, frankincense, fragrant smoke of frankincense; olibanum, fragrant gum, gumbenzoin burnt as incense; benzoni, benjamin
- fool, good-for-nothing fellow; dolt
விளக்கம்
- சாம்பிராணிக் கட்டிகள் பென்ஜைய்ன் மரப் (benzoin tree) பிசினிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
பயன்பாடு
- சாம்பிராணி தூபம் காட்டு, சாம்பிராணி போடு - burn or offer incense
- சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். (கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?)
- திருவிழாக் காலங்களில் மடத்தைத் திறந்து, மராமத்துப் பார்த்து, சுத்தம் செய்து, அப்பர் [[[சிலை]]க்கு சூடம், சாம்பிராணி காட்டுவார்கள் (பேச்சியம்மை, நாஞ்சில்நாடன்)
- கோயிலை நெருங்கும்போது ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தனத்தோடு பூமாலைகளின் வாசம் வந்து கொண்டிருந்தது. (மஞ்சுவிரட்டு, காமராஜ், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:தூபம் - கற்பூரம் - ஊதுபத்தி - குந்தலிங்கம் - கற்புரை - கந்தரசு - மடசாம்பிராணி - சாம்பிராணிப்பட்டயம் - சாம்பிராணித்தைலம் - சாம்பிராணித்தூபம் - சாம்பிராணிப்பதங்கம் - சாம்பிராணிவத்தி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +