சிட்டுக்குருவி லேகியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சிட்டுக்குருவி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிட்டுக்குருவி லேகியம், பெயர்ச்சொல்.

  1. சிட்டுக்குருவி உண்ணும் ஒருவகை தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆண்மை குறைவை போக்கும் மருந்து. இது சீட்டுக்குருவியை கொண்டு செய்யப்படுவது இல்லை.
  2. பாலுணர்வு வீரிய மருந்து
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் a kind of aphrodisiac
விளக்கம்
  • அங்கீகரிக்கப்படாத மருத்துவர்களால் விற்கப்படும் ஆண்மை வீரிய மருந்துகளுக்குப் பொதுவாக “சிட்டுக்குருவி லேகியம்” என்ற பெயர் வழங்கப்படுகிறது.
  • முழுவதும் மக்களைச்சார்ந்தே வாழும் இப்பறவைகள் அழிந்து கொண்டிருக்கும் பறவையினமாகக் கருதப்படுகிறது...இந்த நிலைக்கு நகர்ப்புறங்களில் ஏற்படுத்தப்பட்ட மின்னணு கோபுரங்கள் ஒரு காரணமானால் மனிதர்களின் லேகியத் தேவைக்காகப் பெருமளவு இப்பறவைகள் வேட்டையாடப்பட்டதும் ஒரு காரணம்...மக்களின் பழைய பாணி வீடுகள் மறைந்து நவீன வீடுகள் தோன்றியதும் ஒரு காரணம்...பழைய பாணி வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்து வாழ, அநேக சந்து பொந்துகள் இருந்தன.
பயன்பாடு
  • கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில வைத்தியர்கள், ஆண்மை விருத்திக்கு உதவும் சிட்டுக்குருவி லேகியம் தயாரிக்க, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.(தினமலர் செய்தி)



( மொழிகள் )

சான்றுகள் ---சிட்டுக்குருவி லேகியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிட்டுக்குருவி_லேகியம்&oldid=1990531" இலிருந்து மீள்விக்கப்பட்டது