சிவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(சிகாரம் + வகாரம் + ம்காரம்) சிகாரம் - அறிவு, வகாரம் - மனது, மகாரம் - ஆற்றல் (மாயை)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிவம், பெயர்ச்சொல்.

  1. சித்துருவாகிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் சிவசொரூபம்
  2. சைவசித்தாந்தம்
  3. முத்தி
  4. உயர்வு, செம்மை
  5. நன்மை
  6. சிவதத்துவம்
  7. கால அளவு; யோகமிருபத்தேழனுள் ஒன்று
  8. குறுணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. highest state of God in which He exists as Pure Intelligence
  2. Siddhanta philosophy
  3. final deliverance; liberation from birth; final bliss
  4. excellence
  5. goodness, prosperity, auspiciousness
  6. sphere or region of knowledge presided over by Siva
  7. (Astron.) a division of time
  8. a measure of capacity
விளக்கம்
பயன்பாடு
  • அன்பே சிவம்
(இலக்கியப் பயன்பாடு)
  • .சித்தமல மறுவித்துச் சிவமாக்கி (திருவாச. 51, 1).
  • சிவமென்னு மந்தந்தரம் (சி. போ. 12, 4, வெண்பா.)
  • அந்தமில்லாச்சிவஞ் செய்கின்றான் (திருநூற். 17)
  • ஒல்லைக்கொடுத்த மதுச்சிவமென் றுரைத்தான்(உபதேசசா. சிவநாம. 8)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
முத்தி - செம்மை - உயர்வு - சிவன் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவம்&oldid=1986431" இலிருந்து மீள்விக்கப்பட்டது