செங்குருதியணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும்.
  • இவையே இவ் விலங்குகளில் பிரணவாயுவை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
  • பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன.
  • இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்குருதியணு&oldid=1394944" இலிருந்து மீள்விக்கப்பட்டது