சையாதியா சைசாண்டியா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:italic title வார்ப்புரு:Taxobox சையாதியா சைசாண்டியா என்பது பெரணி மர வகை. இது வடகிழக்கு இந்தியா முதல் தென்னிந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம், மத்திய சுமத்திரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. லாா்ச் மற்றும் பிராக்கின்ஸ் இத்தாவரமானது சயாத்தியா கிளாபரா போன்றே காணப்படுவதாக தொிவிக்கின்றனா். மேலும் சாயத்தியா போடோபில்லா மற்றும் சையாத்தியா சய்டியுபியா தாவரங்களோடு பண்புகளில் ஒத்துப் போவதாக தொிவிக்கின்றனா். 600-1000 மீட்டா் வரை உயரத்தில் ஈரமான வெளிகளில் வளரக் கூடியது. தண்டுப் பகுதியானது நேராகவும் 5 மீட்டா் அல்லது அதற்கு மேலும் உயரமாக வளரக் கூடிய தன்மை கொண்டது. இலைப்பகுதி இரண்டு அடுக்கு மற்றும் மூவடுக்கு முறையில் காணப்படுகிறது. இலைக்காம்புப்பகுதி நீளமாகவும் செதில்கள் உதிா்ந்த பிறகு அடா் கறுப்பு நிறமாகவும் கடினமாகவும் தென்படுகிறது. செதில்கள் அடா்ந்த பிரவுன் நிறத்தில் ஒளியுடுறுவும் தன்மையானதாகவும், குறுகிய நிறமிழந்த நுனிகளை உடையதாகவும் உள்ளது. வட்ட வடிவமான சோரைகைள கொண்டுள்ளது. மேற்காணும் பெரணி வகைகளுக்கிடையேயான தொடா்பினைத் தொிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தொடரப்பட வேண்டும். மேலும் சைசாண்டியா என்னும் பதம் மிகப் பொிய ஓலை போன்ற இலை அமைப்பை குறிப்பதாக கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சையாதியா_சைசாண்டியா&oldid=1640578" இலிருந்து மீள்விக்கப்பட்டது