ஞமலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • ஞமலி, பெயர்ச்சொல்.
 1. நாய்
  கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை (பட்டினப்பாலை. 140)
 2. மயில் (பிங்கல நிகண்டு)[1]
 3. கள் (சூடாமணி நிகண்டு)
 4. ஞாளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. dog
 2. peacock
 3. toddy


இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

 1. பாரதியார் பாடல்கள் : ஞமலி போல் வாழேல்
 2. அகநானூறு
  • அர வாய் ஞமலி மகிழாது மடியின்
  • விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
  • வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் (ஞாளி=ஞமலி)
 3. குறிஞ்சிப்பாட்டு: முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
 4. குறுந்தொகை: 179x02 எல் உம் எல்லின்று ஞமலி உம் இளைத்தன
 5. மலைபடுகடாம்: 042 மதம் தபு ஞமலி நாவின் அன்ன
 6. நற்றிணை: மனை வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
 7. பதிற்றுப்பத்து:கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை
 8. பெரும்பாணாற்றுப்படை
  • பகு வாய் ஞமலியொடு பை புதல் எருக்கி
  • ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
  • மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
 9. புறநானூறு:தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
 10. சீவகசிந்தாமணி
  • நின்று எஞ்சு கின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
  • வண்ணப் பூம் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
 11. கந்தபுராணம்
  • நிணம் கவர் ஞமலி ஓர் சார் ஞெரேல் எனக் குரைப்பப் புள்ளின்
  • நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலி நீர் நசையால்
  • மறம் தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பிலோர்கள்
  • அலை வணக்கரும் ஞமலி எம் அடிகளை அடைந்தோர்
  • பாடு உற்றன ஞமலித் தொகை பரவுற்றன கொடிமேல்
  • தசை கவர் ஞமலிகள் தலைச் சென்று ஈர்க்கவும்
  • கூர்ந்தனன் ஞமலி ஊர்தி கொற்ற வெம் படையை வாங்கி
 12. பெரியபுராணம்
  • குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யார்த்த
  • கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
 13. திருவிளையாடற்புராணம்
  • கட்டி இட்ட வலை பிழைத்து ஞமலி கௌவ நின்றவும்
  • நன்வு கொல்லோ கனவு கொல்லோ இன்று நாதன் ஞமலிக்குத் தவிசு இட்ட நலம் போல் என்னை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞமலி&oldid=1634597" இருந்து மீள்விக்கப்பட்டது