தடம் மாறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தடம் மாறல்

சொல் பொருள் விளக்கம்

தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர் வழி அல்லத திட்டப் படுத்திய வழி. அத்தடத்தை மாறி வேறு தடத்தில் போவது என்பது முறைகேடு ஒழுங்கின்மை என்னும் பொருள் தருவதாம். ஓட்டப் பந்தயத்தில், கொடுப்போடுவதும் அவரவர் கோட்டில் ஓடவேண்டும் என்பதும் ஒழுங்குமுறை. சிலர் புறப்படுமிடம் சரியாக இருக்கும். ஓடும்போது தடம்மாறிவிடுவர். இறுதியில் உரிய தடத்திற்குப்போய் வெற்றி பெற்றுவிடுவர்.இது, தடுமாறலை விளக்கும். தட்டுக்கெடுதல், தட்டழிதல் என்பனவும் இப்பொருளவே, தட்டு என்பது வரைகோடு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடம்_மாறல்&oldid=1913022" இலிருந்து மீள்விக்கப்பட்டது