தடுப்பணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தடுப்பணை(பெ)
- ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், நீர் இருப்பைக் கூட்டவும் கட்டப்பட்ட நீர்த்தேக்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், நீர் இருப்பைக் கூட்டவும் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் திருச்சி மாநகர குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக, காவிரி ஆற்றுப்படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, இந்தப் பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இவற்றைத் தடுத்து, கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயரவும், நீரின் தன்மை மேம்படவும் வழிவகை செய்யும் வகையில் முத்தரசநல்லூர் அருகே ரூ.32 கோடி செலவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை 1.5 மீட்டர் உயரம்தான் இருக்கும். எனவே, இதனால் கரைப் பகுதிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது.
- கதவணை என்பது, பாசனத்திற்காக தண்ணீரை மாற்றி விடுவதற்கான அமைப்பு ஆகும். கதவணை கட்ட சுமார் ரூ.200 கோடி செலவு ஏற்படும். ஆனால், தற்போது, தடுப்பணை கட்டப்படும் இடத்தில் இருந்து, நீர்ப்பாசனத்தைப் பெருக்குவதற்கு வழிவகை செய்ய எதுவும் இல்லை. தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பணை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும், குடிநீர் திட்டங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கச் செய்வதற்கு மட்டும்தான் பயன்படும். எனவே, கதவணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார் முதல்வர். (காவிரி ஆற்றுப்படுகையில் கதவணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை, தினமணி, 30 Aug 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தடுப்பணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
அணை - அணைக்கட்டு - கதவணை - நீர்த்தேக்கம் - குளம் - குட்டை - ஏரி -