தண்ணீர்ப் பிசாசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தண்ணீர்ப் பிசாசு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தண்ணீரை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்/வீணடிப்பவர

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the one who uses lots of water resulting in wastage

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...ஒரு வேலை செய்யத் தேவைக்குமேல் மிக அதிகமாக பல மடங்கு, சற்றும் சிக்கனம் பாராது, தண்ணீரைச் செலவு செய்பவரைத் தண்ணீர்ப் பிசாசு என்பார்கள்...தண்ணீரில் அளைவதே இவர்களுக்கு மன மகிழ்ச்சி...கழுவியப் பாத்திரங்களையே மேன்மேலும் பலமுறைக் கழுவுவதும்,துணிகளை அநேகதடவைத் தண்ணீரில் தோய்த்து, அலசுவதும், குளிக்கச்சென்றால் மிக நீண்ட நேரம் குளிப்பதும், சுத்தம் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாளைக்குப் பலமுறை குளிப்பதும், கை, கால் அலம்பிக்கொண்டே இருப்பதும் இவர்களது அடையாளமாகும்... வீட்டிற்கு ஒரு பொழுது தண்ணீர் வழங்கல் இராது என்றுத் தெரிந்தால் போதும், வீட்டிலுள்ள எல்லா பெரிய, சிறிய, மிகச்சிறிய கொள்ளளவு உள்ளப் பொருட்களிலும் நீரைச் சேகரித்து வைத்துவிடுவர்...இவர்களை மனதில் கொண்டுதான் 'அதிகமாகத் தண்ணீரைச் செலவழித்தால், செல்வமும் (பணமும்) அதே போல் தண்ணீராகச் செலவாகும்' என்று சொல்லும் வழக்கம் சமூகத்தில் நிலைபெற்றதோ?
"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணீர்ப்_பிசாசு&oldid=1653649" இலிருந்து மீள்விக்கப்பட்டது