தலையீடு
தலையீடு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தலையிடுகை
- முதல் தரம்
- தலைப்பிலிருப்பது. (ஆற்றங்கரையில் தலையிட்டுக்கொல்லையில்)
- முதல் ஈற்று
- சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- interference, intervention, engaging, undertaking
- first quality, highest grade
- that which is nearest or first
- first delivery or yeaning; first crop (Colloq).
- (Arch.)coping (Colloq)
விளக்கம்
பயன்பாடு
- political interference - அரசியல் தலையீடு
- அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் காவல்துறை சிறப்பாக செயல்பட முடியும் (தினமணி, 18 சூலை 2009)
- விளையாட்டு வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை (தினமணி, 8 ஆகஸ்ட் 2009)
- இவ்விஷயத்தில் அரசு தலையீடு இருந்தால் விரைவில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் (தினமணி, 7 ஏப்ரல் 2010)
- அதிகாரச் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீடு இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களை எப்படி எப்படியோ ஆக்கிவிட்டது ( சத்திய வெள்ளம், நா. பார்த்தசாரதி)
- தலையீட்டு நிலம் - land of first quality
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலையீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +