தலையெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலையெழுத்து, பெயர்ச்சொல்.

  1. தலைவிதி; பிரமனால் தலையில் எழுதப்பட்ட விதி; பிரமலிபியாகிய விதி
  2. நூல் முகப்பு
  3. பெரிய எழுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fate, as Brahmas writing on the head
  2. heading or title of a book
  3. capital letter
விளக்கம்
பயன்பாடு
  • என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு. 'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 10-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
  • தன் றலையெழுத்தேயென்ன(பிரபுலிங். அக்கமா. உற். 35).
(இலக்கணப் பயன்பாடு)
விதி - தலைவிதி - உயிரெழுத்து - மெய்யெழுத்து - உயிர்மெய்யெழுத்து


( மொழிகள் )

சான்றுகள் ---தலையெழுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையெழுத்து&oldid=1062302" இலிருந்து மீள்விக்கப்பட்டது