உள்ளடக்கத்துக்குச் செல்

தழுவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தழுவு(வி)

  1. ஒருவரை அன்பால் மார்போடு அணை
  2. மேற்கொள்
  3. அணைத்து ஆதரி
  4. நட்பாக்கு
  5. சூழ்
  6. உள்ளடக்கு
  7. பூசு
  8. பொருந்து
  9. புணர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. clasp, embrace, hug, entwine
  2. espouse, adopt, as an opinion, course of life; keep, observe, as a command
  3. treat kindly
  4. make friendship
  5. surround
  6. compress; contain; keep within oneself
  7. besmear, rub on
  8. mix with, join
  9. copulate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி! (பாரதியார்)
  • மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ (மணி. 6, 139)
  • பணிமுறை தழுவுந் தன்மையார் (கம் பரா. ஊர்தே. 50)
  • குடிதழீஇ (குறள், 544)
  • உலகந் தழீஇய கொட்பம் (குறள், 425)
  • தண்பணை தழீஇய (பெரும்பாண். 242)
  • அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289)
  • சாந்தங்கொண்டு நலமலிய வாகந் தழீஇ (பதினொ. திருக்கைலா. 15)
  • தமிழ்தழிய சாயலவர் (சீவக. 2026)

ஆதாரங்கள் ---தழுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அணை - கட்டிப்பிடி - மேற்கொள் - ஆதரி - சூழ்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தழுவு&oldid=1063596" இலிருந்து மீள்விக்கப்பட்டது