திமிசுக்கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திமிசுக்கட்டை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சாலை சமன்/சீர் செய்ய உதவும் ஒரு சாதனம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wooden tamper, rammer
  2. a wooden rod with heavy iron bottom to level edges while laying a road.

விளக்கம்[தொகு]

சாலை அமைக்கும்போது கொட்டப்பட்ட மண், குறுங்கற்கள் மற்றும் 'தார்' இவைகளைச் சாலையின் இருபுறத்து ஓரங்களில் செம்மையாக இடித்துத் தரையோடு தரையாகச் சமனப்படுத்த பயனாகும் ஒரு சாதனமே திமிசுக்கட்டையாகும்...
  • ஒரு பெரிய கனத்த ஆளுயர மரக்கட்டையையின் ஒரு முனையை மிக எடையுடைய சதுரவடிவிலான ஒரு இரும்புத்துண்டின் நடுவிலிருக்கும் ஓட்டையில் இறுக்கமாகப் பொருத்தியிருப்பர்...இதை ஒரு வேலையாள் தேவைப்படும்போது சாலையின் ஓரங்களில் இருகைகளாலும் பிடித்துத் தூக்கித்தூக்கி இடித்து மண்,குறுங்கற்கள்,தார் இவைகளை ,அவ்வப்போது தண்ணீர் விட்டு, சாலையோடு நன்றாகச் சேரும்படி சமனப்படுத்துவார்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---திமிசுக்கட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திமிசுக்கட்டை&oldid=1468197" இருந்து மீள்விக்கப்பட்டது