திருக்கன்னலமுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருக்கன்னலமுது-அரிசி
திருக்கன்னலமுது-வெல்லம்
திருக்கன்னலமுது-ஏலக்காய்
திருக்கன்னலமுது-நெய்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திருக்கன்னலமுது, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இனிப்பான அரிசி உணவு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sweet cooked rice in seni-liquid form..

விளக்கம்}[தொகு]

  • திரு + கன்னல் + அமுது = திருக்கன்னலமுது...திரு என்றால் தெய்வத்தொடர்பான இடங்களுக்கும், பொருட்களுக்கும்தொடர்புடையதாய் புனிதமான என்ற பொருளில் வழங்கும் ஒரு சொல்...கன்னல் என்றால் கரும்பு... அமுது என்றால் அமுதம்(அமிர்தம்)...ஆக கரும்பைப்போல் இனிப்பான அமுதம் என்று பொருள்...பண்டிகை நாட்களிலும், கலியாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போதும் வைணவ அந்தணர்களின் வீடுகளில் தயாரிக்கப்படும் மிக இனிப்பான உணவு... சர்க்கரைப்பொங்கல், அக்காரவடிசில் போன்றே வெல்லம், அரிசி, ஏலக்காய், நெய், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியப்பொருட்கள் திருக்கன்னலமுதைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன...சிலர் இது திருக்கண்ணமுது (திரு + கண்ணன் + அமுது) என்றும், இறைவன் கண்ணபிரானுக்கு உகந்த உணவு என்றும் சொல்லுவார்கள்...

  • ஆதாரம்...திருக்கண்ணமுது...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருக்கன்னலமுது&oldid=1225323" இலிருந்து மீள்விக்கப்பட்டது